மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்டையால் அடித்து மனைவியை கொன்ற கணவன்! என்னதான் நடந்தது? வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!!
சென்னை அம்பத்தூர், நேரு தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் பிரம்மா. இவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இவருக்கு 22 வயது நிறைந்த ரஷியா கத்துனா என்பவருடன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் சென்னைக்கு வந்துள்ளனர்.
பின் ஹரிஷ் பிரம்மா, அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு ரஷியா கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டுவிட்டதாக கூறி ரத்தம் வழிய ஹரிஷ் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ரஷியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனையில் ரஷியா கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் ஹரிஷ் பிரம்மாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர் கூறியதாவது, கடந்த 3 மாதங்களாக எனது மனைவி ரஷியா, வேறு சில ஆண்களுடன் செல்போனில் பேசி வந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் சம்பவதன்று நான் அவளை கட்டையால் தாக்கிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டேன். பின் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்தபோது, ரஷியா சுயநினைவின்றி கிடந்தார்.
அதற்கு பின்னரே அவர் கீழே விழுந்து விட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் ஹரிஷ் பிரம்மாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.