குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
காதல் மனைவியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்!
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் அயோத்தியபட்டினம் அடுத்துள்ள காரியபட்டியை சேர்ந்த 23 வயதான இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி தனது பெற்றோரை தொடர்பு கொண்ட இளம் பெண் தான் குப்பனூரில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கு சென்ற பெற்றோரிடம், தனது கணவனுக்கு தெரியாமல் தப்பி வந்ததாக கூறியுள்ளார். மேலும் தனது கணவர் தன்னை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்து அதனை அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும், அதனால் அவருக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பி வந்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து காரியாபட்டி போலீசில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செந்திலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். காதல் கணவரே மனைவியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.