மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செங்கல்பட்டு: திருமணமான 2 ஆண்டுகளில் இப்படியா நடக்கணும்?.. தவிக்கும் மனைவி, 6 மாத கைக்குழந்தை..!
ஆன்லைனில் செயலி உதவியுடன் கடனை பெற்றவர், இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். திருமணமான இரண்டாவது ஆண்டில் மனைவி கைக்குழந்தையுடன் தவிக்க, கணவர் தன்னை நம்பிய இரண்டு பேரை தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருமணமாகி 2 ஆண்டுகளே ஆகிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுத்தேரி பகுதியில் வசித்து வருபவர் யுவராஜ் (வயது 27). இவரின் மனைவி சுபாஷினி (வயது 24). தம்பதிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் சமீபத்தில் (6 மாதங்களுக்கு முன்) பெண் குழந்தை பிறந்துள்ளது.
யுவராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் குடும்பத்தை நடத்த சிரமம் ஏற்பட, அதனை சமாளிக்க ஆன்லைனில் செயலி உதவியுடன் கடனை பெற்றுள்ளார். இந்த கடனை அடைக்கவும் முடியாமல், தவணை செலுத்தவும் முடியாமல் தவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ஸ்கூட்டர், எல்இடி டிவி, 2.5 சவரன் செயின் பரிசு; ஆசையாக பேசி விழாக்கால மோசடி.. மக்களே உஷார்.!
மனஉளைச்சலில் தற்கொலை
இதனால் மனவேதனையில் அவர் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் படுக்கையறைக்கு சென்ற யுவராஜ் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரின் மனைவி உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனைக்கண்டு அலறிய பெண்ணின் அலறல் கேட்டு வந்த குடும்பத்தினர், யுவராஜின் உடலை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர், யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தென்காசி: கள்ளகாதலியுடன் சேர்த்து செய்யக்கூடாத வேலை; தலைமை காவலருக்கு நேர்ந்த சோகம்..!