மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அக்கம் பக்கத்தினரிடம் பேசக்கூடாது; தாய் கண்டித்ததால் 14 வயது சிறுமி தற்கொலை.!
சென்னையில் உள்ள தாம்பரம், மப்பேடு பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் தனது தாய், தந்தையுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், சிறுமியின் தாய் வீட்டு வேலைகளை செய்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
அக்கம்-பக்கத்திடம் பேசாதே
கண்டிப்பு குணம் கொண்ட பெண்மணி, தனது மகளை அக்கம் பக்கத்தினரிடம் பேச அனுமதித்தது இல்லை என கூறப்படுகிறது. இதனால் தாய் - மகள் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.
இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டையால் விரக்தி; இரயில் முன் பாய்ந்து இளைஞர் மரணம்?.. சடலமாக மீட்கப்பட்ட உடல்.!
சிறுமி தற்கொலை
இந்நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில், சோகத்தின் உச்சத்திற்கு சென்ற சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து அவரின் உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: 16 வயது மகளை தாய்மாமனுக்கு திருமணம் செய்ய வைக்க ஏற்பாடு; இரயில் முன் பாய்ந்து உயிரைவிட்ட சிறுமி.!