ஏரி ஆக்கிரமிப்பு வீடை அதிகாரிகள் இடித்துவிடுவதாக அச்சம்; தொழிலாளி பயத்தில் தற்கொலை.!



in Chennai Thiruverkadu man Dies by Suicide 

 

ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டை அதிகாரிகள் இடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள திருவேற்காடு, கோலடி ஏரிக்கரை பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (வயது 44). இவர் தொழிலாளி ஆவார். கோலடி ஏரியை ஆக்கிரமிப்பு செய்து பல வீடுகள் கட்டப்பதாக புகார் எழுந்தது. 

இதையும் படிங்க: பார்சல் உணவில் கையுடன் வந்த சில்வர் கோட்டிங்., பசிக்கு உணவு வாங்கிய சாமானியனுக்கு பேரதிர்ச்சி.. சென்னை மக்களே கவனம்.!

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், இதுசம்பந்தமாக ஆய்வு செய்தபோது மொத்தமாக சுமார் 1600 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டது தெரியவந்தது. 

இடித்து-அகற்றம்

ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் சங்கரின் வீடும் இருந்துள்ளது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாரபட்சமின்றி இடித்து அகற்றப்படுகிறது.

chennai

அச்சத்தில் சோகம்

இதனால் அதிகாரிகள் எதிர்காலத்தில் தனது வீட்டையும் அகற்றிவிடுவார்களோ என சங்கர் சோகத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருவேற்காடு காவல்துறையினர், அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பகீர் சம்பவம்.. 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.!! பலாதக்காரம் செய்து படுகொலை.!!