மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாட்ஸப்பில் போட்டோ, ஜிபே-வில் பணம்.. உளுந்தூர்பேட்டையில் ஹைடெக் விபச்சாரம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில், வாட்சப் வாயிலாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படத்தை அனுப்பி வைத்து, ஹைடெக் முறையில் விபச்சார தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையில், காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சின்னசாமி நகர் பகுதியில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடைபெறுவது உறுதியானது. அங்கு இருந்த கல்பனா என்ற 44 வயது பெண்மணி கைது செய்யப்பட்டார். மேலும் 2 பெண்கள், மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களும் கைதாகினர். வீட்டில் இருந்து 3 சிறுமிகளும் மீட்கப்பட்டனர்.
சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய அவலம்
இந்நிலையில், இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் போட்டோவை அனுப்பி இந்த கும்பலே விபச்சார தொழில் செய்து வந்தது உறுதியானது. இவர்கள் அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலருக்கும் பெண்களை அனுப்பி வைத்து, அதற்கான பணத்தை ஜி-பே மூலம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது. சிறுமிகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியை விபசாரத்தில் தள்ளி கொடுமைப்படுத்திய 23 வயது கணவன்; சேலத்தில் பகீர் சம்பவம்.!
கைதான கல்பனா விபச்சாரத்திற்கு முக்கிய புள்ளியாக செயல்பட்டு உறுதியானதை தொடர்ந்து, அவரிடம் சிறுமிகளிடம் அத்துமீறிய நபர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் பெரிய புள்ளிகளும் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விசாரணைக்கு பின்னர் எலசவனூர்கோட்டை காவலர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பயணிகளிடம் கறாராக நடந்துகொள்ளும் தனியார் பேருந்து ஓட்டுநர்; அங்கெல்லாம் இந்த பஸ் நிற்காதாம்.!