முதிய தம்பதியின் முடிவால் சோகம்.. கடன் தொல்லையால் விஷம் குடித்து கணவர் பலி., மனைவி உயிர் ஊசல்.!



in Madurai Usilampatti Couple Dies by Suicide 

கடன் தொல்லை காரணமாக தம்பதி தற்கொலைக்கு முயன்ற நிலையில், கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, திருப்பாலை பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 65). இவர் அரசுப் பேருந்து நடத்துனராக பணியாற்றி, தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.

கண்ணனின் மனைவி மீனாட்சி (வயது 60). தம்பதிகள் இருவரும் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தம்மனம்பட்டி கிராமத்தில் இருக்கும் லாரி செட்டில் தங்கி இருக்கின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: ஏய் சாஞ்சிருச்சு.. ஐயோ ஜேசிபி ஆபரேட்டர் என்ன ஆனார்? மாட்டுத்தாவணியில் நடந்த அசம்பாவிதம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

madurai

கடனால் தவித்த தம்பதி

இருவரும் திருமணம் முடிந்து, மதுரை உசிலம்பட்டி பகுதியில் தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனிடையே, தம்பதிகளுக்கு கடன் பிரச்சனை இருந்துள்ளது.

இதனால் திருச்ண்டுர் கோவில் சென்று வருவதாக கூறிய கண்ணன் - மீனாட்சி தம்பதி, லட்சுமணப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் விஷம் சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். 

இவர்களை மீட்ட உள்ளூர் மக்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு கண்ணன் உயிரிழந்துவிட, மீனாட்சி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: மரணத்திலும் பிரியா ஜோடி.! மனைவி இறந்த துக்கம்.! மறுநாளே கணவருக்கு நேர்ந்த துயரம்.!!