பெரம்பலூர்: பணியிடத்தில் மின்சாரம் தாக்கி சோகம்; சம்பவ இடத்திலேயே மரணம்.!



in Perambalur Man Dies Electrocution 

 

வேலை பார்த்துக்கொண்டிருந்த இடத்தில், கம்பிகளை வெட்டும்போது இயந்திரத்தில் இருந்து பாய்ந்த மின்சாரம் ஒருவரை காவு வாங்கியது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் வசித்து வருபவர் தனுஷ். இவர் கூலித்தொழிலாளி ஆவார். சம்பவத்தன்று வெங்கடேசபுரம் பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பரிதாப பலி.. பூ பறிக்கச் சென்றபோது துயரம்.!

அப்போது, இயந்திரத்தின் வாயிலாக கம்பிகளை வெட்டிக்கொண்டு இருந்தார். அச்சமயம், எதிர்பாராத விதமாக தனுஷின் மீது மின்சாரம் பாய்ந்ததால், அவர் மயங்கி சுருண்டார். 

மின்சாரம் தாக்கி பலி

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள், அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். 

அங்கு நடந்த சோதனையில், தனுஷ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மின்கம்பி உருவத்தில் வந்த எமன்; 12 வயது சிறுவன் துள்ளத்துடிக்க பலி., சிவகங்கையில் சோகம்.!