நெல்லை: அச்சச்சோ.. நெஞ்சமெல்லாம் பதறுதே.. திடீரென வாகனத்தில் பாய்ந்த மாடு.. கல்லூரி மாணவி படுகாயம்..! வாகன ஓட்டிகளே கவனம்.!



in Tirunelveli College Student Injured after Cow Hits 

 

இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுகொண்டு இருந்த மாணவி, மாடு பாய்ந்து விபத்தில் சிக்கினார்.

கல்லூரி மாணவி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமால் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுவாதி. இவர் கல்லூரி மாணவி ஆவார். வண்ணாரப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். நேற்று அவர் வழக்கம்போல, கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: பெண் தூய்மை பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு; டூ-வீலர் மீது லாரி மோதி துயரம்.. திருமங்கலத்தில் சோகம்.!

திடீரென குறுக்கே பாய்ந்த மாடு

மாணவி தியாகராஜ நகரில் சென்றபோது, இரண்டாவது தெருவில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்து. அப்போது, ஒரு மாடு ஒன்று திடீரென ஆவேசமாகி மாணவியின் வாகனத்தின் மீது குறுக்காக பாய்ந்தது. இத சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி கீழே விழுந்தார். 

accident

மருத்துவமனையில் அனுமதி

வாகனம் விபத்திற்குள்ளாகும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பான காட்சிகள், அங்கிருந்த கேமிராவில் பதிவாகி, தற்போது வைரலாகி வருகிறது. 

நடவடிக்கை வேண்டும்

சாலைகளில் பயணம் செய்வோர் சற்று தூரமாக மாடு இருந்தாலும், அதனை பார்த்ததும் வாகனத்தின் வேகத்தை குறைத்து பயணம் செய்வது நல்லது. இவ்வாறாக சாலையில் மேய்ச்சலுக்கு மாடுகளை விடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே, இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யும். 

பதறவைக்கும் காட்சிகள்

இதையும் படிங்க: மதுரை: சிமெண்ட் லாரி - கார் மோதி பயங்கர விபத்து; காவல் உதவி ஆய்வளர் பரிதாப மரணம்.!