ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடப்பாவி!! தெரு மின்விளக்குகளை அனைத்து விட்டு தொடர் கொள்ளை... கையும் களவுமாக சிக்கிய கொள்ளையன்..!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே நூதன முறையில் தெரு மின்விளக்குகளை அனைத்து விட்டு தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டப்பிடாரம் பகுதியில் நேற்று ஒரு வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக கொள்ளையன் வீட்டில் உள்ளே நுழைந்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தப்பிச்செல்ல முயன்ற கொள்ளையனை துரத்தி பிடித்து தூணில் கட்டி வைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கொள்ளையனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையன் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பதும் மேலும் அப்பகுதியில் கனகராஜ் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கனகராஜை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.