மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடிஅடின்னு அடிச்சி கொடுமைப்படுத்துறாங்க - மனைவி மீது இன்ஸ்டா அகோரி கலையரசன் பகீர் குற்றச்சாட்டு.!
திடீர் சாமியார் உருவெடுத்த கலையரசன், அவரின் மனைவியால் துன்புறுத்தப்படுவதாக கதறி இருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர் கலையரசன். இவர் தன்னை அகோரியாக அறிவித்து, மனைவி ஒருவருடன் விபரீத மாந்த்ரீக பூஜை செய்வது போன்றும் அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு வந்தார். இவர் தனது செயல்பாடுகளை இன்ஸ்டாகிராம், முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களில் விடியோவாகவும் பதிவு செய்து வந்தார்.
இதையும் படிங்க: பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து 2 ஆண்டுகள் மோசடி; 26 வயது இளைஞன் கைது.!
மனைவியின் குற்றச்சாட்டு
இதனிடையே, இவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கூறி இருக்கிறார். சமீபகாலமாகவே கணவன் - மனைவி இடையே பிரச்சனை எழுந்த நிலையில், கலையரசனின் மனைவி தனது கணவரான அகோரி பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், ஆந்திராவில் இருந்து வந்த பக்தையுடன் பாலியல் உறவில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைத்து இருக்கிறார்.
அகோரியின் காம லீலை.. வெளுத்து வாங்கிய கலையரசன் மனைவி.!""பண்ண சொன்னதே மனைவி தான்.."#thanthitv #agori #agorikalaiyarasan pic.twitter.com/gndUY2pscm
— Thanthi TV (@ThanthiTV) November 6, 2024
முறைகேடான விஷயத்துக்கு ஒத்துழைக்க வற்புறுத்தும் மனைவி:
மேலும், கலையரசனிடம் அவரின் மனைவி, கோடிக்கணக்கில் சாமியாரின் பெயரில் வரும் பணத்தை மாற்றி விட வற்புறுத்தியதாகவும் தெரியவருகிறது. இதில் விருப்பம் இல்லாத கலையரசன் மறுப்பு தெரிவிக்கவே, அவரின் மனைவி, மச்சான் ஆகியோர் சேர்ந்து தாக்கி, மிரட்டி கொலை செய்திடுவதாகவும் மிரட்டி இருக்கின்றனர்.
உயிர்பயத்தால் சோகம்
இதனால் வாழ்க்கையின் மீது பயம் கொண்ட கலையரசன், விவாகரத்து கேட்டு புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது உயிருக்கு அச்சம் இருப்பதால், பாதுகாப்பு தவறு வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளார்.
நடத்த்து இதுதான்
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு எனது மனைவியும், மச்சானும் தவறான பாதையில் வழிநடத்த முயல்கிறார். இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தனிக்குடித்தனம் நடத்த நான் அழைத்ததில் உருவான பிரச்சனை, இன்று என்னை கொலை செய்வதாக மிரட்டும் வரை சென்றுவிட்டது. அடிஅடி என வெளுத்துவங்கிவிட்டார்கள். அவர்களிடம் இருந்து தப்பி வந்து இருக்கிறேன் என கலையரசன் கதறி இருக்கிறார்.
இதையும் படிங்க: திருமணமான பெண்ணை வரன் தேடுவதாக பதிவிட்ட பாரத் மேட்ரிமோனி; இது பலே மோசடி.. பாதிக்கப்பட்ட பெண் பகீர்.!