#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணமான பெண்ணை வரன் தேடுவதாக பதிவிட்ட பாரத் மேட்ரிமோனி; இது பலே மோசடி.. பாதிக்கப்பட்ட பெண் பகீர்.!
தேசிய அளவில் பாரத் மேட்ரிமோனி எனப்படும் திருமணம் தொடர்பான வரன்கள் பதிவு செய்யும் முக்கிய இணயத்தளம், திருமணமான பெண் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி சிக்கிக்கொண்ட சம்பவம் அம்பலமாகி இருக்கிறது. இதனை பிரீமியம் என்பதும் பணம் செலுத்தி வரன் தேடும் நபர்களின் பக்கத்தில் பாரத் மேட்ரிமோனி உபயோகம் செய்துள்ளது.
பதறிப்போன பெண்மணி
“சுவாதி முகுந்த்" என்ற பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி, அவர் பாரத் மேட்ரிமோனியில் வரன் தேடுவதாகவும், சென்னையை சேர்ந்த பிடெக் பட்டதாரி பெண் எனவும் அதில் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல் சுவாதியின் பார்வைக்கு எட்டவே, அவர் தனது கணவருடன் எனக்கு திருமணம் ஆகிவிட்டது, நான் எந்த செயலியிலும் வரன் தேடவில்லை எனக் கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: "ஐயோ மோசம் போயிட்டோமே.." மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்.!! அதிர்ச்சியில் கொள்ளையர்கள்.!!
வீடியோ வெளியிட்டு விளக்கம்
இதனை பாரத் மேட்ரிமோனியல் (Bharat Matrimony Scam) மோசடி எனவும் அவர் வருணித்து இருக்கிறார். எனது கணவரை நான் இதுபோன்ற மேட்ரிமோனி பக்கங்களில் தேடவில்லை. பாரத் மேட்ரிமோனி மிகப்பெரிய இணையத்தளம், அவர்கள் இப்படி செய்வது எப்படிப்பட்டது? இவ்வாறான மோசடிகள் தவிர்க்கப்பட வேண்டும். பணம் செலுத்தி வரன்கள் தேடும் சந்தாதாரர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
பொய்யான தகவல்கள்
பெண்ணின் தகவலை கூட பாரத் மேட்ரிமோனி போலியாக பதிவு செய்தது, அவர்களின் பதிப்பு புகைப்படம் வாயிலாக அம்பலமாகியுள்ளது. அதாவது, நித்யா ராஜசேகர் என்ற 35 வயது பெண்மணி, பிடெக் பயின்று இருப்பதாகவும், 5'9'' உயரம் கொண்ட பிராமண வகுப்பை சேர்ந்த பெண்மணி என அதில் அதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் பொய்யாக மேட்ரிமோனியல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்ரிமோனி என்று கூறினாலே பணம் பறிப்பு, மோசடி என இருந்து வந்த நிலையில், பாரத் மேட்ரிமோனியல் தொடக்கம் நன்றாக அமைந்தாலும், பினிஷிங்கில் பலே கில்லாடி வேலை பார்த்து சிக்கிக்கொண்டதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ
மேட்ரிமோனி இணையத்தளங்களில் வரன் தேடுவோர் சற்று கவனமாக இருப்பது நல்லது.
இதையும் படிங்க: செல்லூரில் பயங்கரம்... போதையில் எகிறிய மகன்.!! கிரைண்டர் கல்லால் அடித்து கொலை.!!