96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
லாரிக்கு அடியில் படுத்து உறங்கிய நபர் உடல் நசுங்கி பரிதாப பலி: ஐடி ஊழியருக்கு நடந்த சோகம்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள அய்யர்பங்களா பகுதியில் வசித்து வந்தவர் 42 வயது நபர். இவர் நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நாகர்கோவில் செல்வதற்காக மதுரை ரயில் நிலையம் வந்துள்ளார்.
தனது மனைவியுடன் அவர் வருகை தந்த நிலையில், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மனைவியை அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டு கோபித்துக்கொண்டு அவர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரிக்கு அடியில் படுத்து உறங்கிதாக கூறப்படுகிறது.
லாரி ஓட்டுநர் இதனை கவனிக்காமல் வாகனத்தை எடுத்த நிலையில், உறங்கிக் கொண்டிருந்த ஐடி ஊழியரின் மீது லாரி சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.