பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
அரசு பள்ளி, நீட் தேர்வு குறித்து அதிரடியாக கருத்து கூறிய நடிகை ஜோதிகா.! வெளியான பரபரப்பு தகவல்!!
தமிழ் சினிமாவில் புதிய இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராட்சசி. இப்படத்தில் நடிகை ஜோதிகா கதைநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.ஆர் பிரகாஷ்பாபு, எஸ்.ஆர் பிரபு ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இப்படத்தின் கதாநாயகி ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது ராட்சசி படம் குறித்து நடிகை ஜோதிகா கூறியதாவது, ராட்சசி திரைப்படம் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை குறித்த கருத்துக்களை அடிப்படையாக கொண்டது. மேலும் இதுபோன்ற கதைகளுடன் ஏற்கனவே பள்ளிக்கூடம், சாட்டை ஆகிய திரைப்படங்கள் வெளிவந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.
நல்ல கதையம்சம் கொண்ட 100 படங்கள் வந்தாலும் சமுதாயத்திற்கு மிகவும் நல்லதுதான். இதனால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும் என கூறியுள்ளார்.
மேலும் தற்போதைய காலத்தில் நிறைய அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை அவ்வாறு ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுவார்கள். மாணவர்களின் எதிர்காலம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
எனவே மாணவர்களுக்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுத்த பின்பு அரசு நீட் தேர்வு போன்ற தேர்வுகளை நடத்த வேண்டும். இதே போன்ற பல கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ராட்சசி திரைப்படம் உருவாகியுள்ளது என ஜோதிகா கூறியுள்ளார்.