96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கரம்.. 3 குடிசைகள் தீயில் எரிந்து நாசமான சோகம்.!
கேஸ் சிலிண்டர் வெடித்ததில், அடுத்தடுத்து 3 குடிசைகள் எரிந்து சாம்பலான சோகம் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகாமையில் நயினாகுப்பம் கிராமத்தில் மணிகண்டன் என்பவரது தாய் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென கேஸ் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் குழாயில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
இதனால் பயந்து போன தாய் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்த நிலையில், பயங்கர சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்துள்ளது. அத்துடன் குடிசையில் எரியத்தொடங்கிய தீயானது, அருகிலிருந்த மற்ற இரண்டு குடிசை வீடுகளிலும் பரவிய நிலையில், 20 அடி உயரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்துள்ளது.
பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், அருகில் மற்றொரு வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரும் வெடித்துள்ளது.
இதனால் தீ இன்னும் அதிகமாக பற்றிய நிலையில், தீயணைப்பு துறையினரின் விடாமுயற்சியால் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு உயிர்சேதமும் ஏற்படவில்லை.