29 வயது கர்ப்பிணிக்கு அரிதிலும் அரிதான நோய்; மருத்துவர்கள் உதவியால் நலமுடன் வீடுவந்த கள்ளக்குறிச்சி பெண்.!



Kallakurichi Pregnant Women Affect health issue 

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்து வரும் 29 வயது கர்ப்பிணி பெண், கர்ப்பகாலத்தில் உடல் உபாதையை சந்தித்து இருக்கிறார். இதனையடுத்து, பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றவர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அரிதிலும் அரிதான தைராய்டு வீக்கம்

அங்கு நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை துறையில் அனுமதி செய்யப்பட்டவர், மருத்துவரின் முழு அளவிலான கண்காணிப்பில் இருந்துள்ளார். இவருக்கு மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தபோது, பிரைமரி கைபர்போரா தைராய்டிஸம் எனப்படும் தைராய்டு வீக்கம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது உறுதியானது. இவரின் ரத்த அளவை சோதித்தபோது கால்சியத்தின் அளவும் அதிகம் இருந்துள்ளது.  

இதையும் படிங்க: நடுவழியில் பிரசவம்; தாய்-சேயை நலமுடன் பாதுகாத்த அவசர ஊர்தி ஓட்டுநர், மருத்துவ குழுவினர்.!

மருத்துவர்கள் சாதனை

உடலின் பல்வேறு பகுதியில் சுரந்த கால்சியம் பிரச்சனைகளை உண்டாக்கி இறுகிறது. இது அவரின் உயிருக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் நுட்பத்துடன் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், தாய் மற்றும் சேயை காப்பாற்றி இருக்கின்றனர். முழு அளவிலான உடல்நலம் தேறிய பெண்மணி, நேற்று வீட்டிற்கு திரும்பினார். மருத்துவ குழுவினருக்கு மருத்துவமனை முதல்வர் தனது பாராட்டுகளை தெரிவித்தார். 

இந்த வகையான நோய் கர்ப்பிணி பெண்களுக்கு அரிதிலும் அரிதாக ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு; விண்ணப்பிக்க விபரம் உள்ளே.!