96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கியாஸ் சிலிண்டர் வெடித்துசிதறி சோகம்; கணவன், மனைவி, கைக்குழந்தை படுகாயம்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலிமேடு பகுதியை சேர்ந்த தம்பதி, நேற்று வழக்கம்போல வீட்டில் சமையல் செய்துகொண்டு இருந்தனர்.
அச்சமயம் திடீரென வெடிவிபத்து ஏற்படவே, தம்பதிகள் மற்றும் அவர்களின் கைக்குழந்தை தீக்காயத்துடன் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், தம்பதிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் இருவரும் 50% தீக்காயத்துடன் பாதிக்கப்பட்ட காரணத்தால், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குழந்தைக்கு 10% தீக்காயம் என்பதால், செவிலிமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.