96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திருநீறு இல்லாத தேவர் படத்தை பகிர்ந்த கனிமொழி.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!
தேவர் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை வீரரும் அரசியல்வாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தெய்வதிருமகன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குரு பூஜை விழா நேற்று நடைபெற்றது.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேவுள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்திய சுதந்திரப் போரில், நேதாஜியோடு கரம் கோர்த்து, தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் வீரத்தை நினைவு கூர்வோம். சாதி வேற்றுமைகளை கடந்து தமிழர்களாக உயர்ந்து நிற்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தை நிறைவேற்றுவோம். pic.twitter.com/CYtgIpaNHb
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 30, 2020
அவரது ட்விட்டர் பதிவில், "இந்திய சுதந்திரப் போரில், நேதாஜியோடு கரம் கோர்த்து, தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் வீரத்தை நினைவு கூர்வோம். சாதி வேற்றுமைகளை கடந்து தமிழர்களாக உயர்ந்து நிற்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தை நிறைவேற்றுவோம்" என பதிவிட்டிருந்தார்.
ஆனால் அந்த ட்விட்டர் பதிவில் உள்ள தேவர் திருமகனாரின் புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகைப்படங்கள் அனைத்திலும் அவர் எப்போதும் நெற்றியில் திருநீறு பூசியதுபோல் இருக்கும். ஆனால் கனிமொழி பதிவிட்டுள்ள தேவர் புகைப்படத்தில் நெற்றியில் திருநீறு இல்லை. இதனால் கனிமொழி அவர்களின் ட்விட்டர் பதிவிற்கு ஏராளமான நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்து வருகின்றது.