96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதல்.. இளைஞர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை!
சென்னை பூந்தமல்லி அருகே 23 வயது இளைஞர் கடத்தி துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தலைநகர் சென்னையில் சமீப காலமாக போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவதால், குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் கருக்கா என்ற ஸ்டீபன். இவரை நேற்று இரவு காரில் வந்த அடையாளம் தெரியாத மர்மகும்பல் கடத்தி சென்று, மாங்காடு அருகே உள்ள காளி மைதானத்தில் வைத்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முதல் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.