96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
10 பைசாவுக்கு சிக்கன் பிரியாணியா.? போலீசாரின் அதிரடி செயல்.!
சமீப காலமாகவே தங்களது கடையை டிரண்ட்டாக்க, பலரும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஒரு ரூபாய்க்கு பிரியாணி கொடுப்பது, இலவசமாக புடவை கொடுப்பது, தக்காளி வாங்கினால் புடவை இலவசம், செல்போன் வாங்கினால் தக்காளி இலவசம் என்று பல விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம்.
அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரியாணி கடையில் பழைய 1,2,5 மற்றும் 10 பைசா நாணயங்களுக்கு இலவசமாக பிரியாணி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சற்று நேரத்தில் இந்த தகவல் அப்பகுதியில் தீயாக பரவிய நிலையில் மக்கள் தங்களிடம் வீட்டில் கிடந்த பழைய நாணயங்களை எடுத்துக் கொண்டு அந்த கடையை நோக்கி படையெடுத்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக குறிப்பிட்ட பிரியாணி கடையில் பயங்கர கூட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்து பிரியாணி கடையை தற்காலிகமாக மூடி உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பழைய நாணயங்களை சேமிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அந்த பிரியாணி கடை முதலாளி இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டது குறிப்பிடத்தக்கது.