குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பார்க்கும்போதே மனசு பதறுது!! பைக் கவிழ்ந்து 10 அடி தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட இளைஞர்.. வைரல் சிசிடிவி காட்சி..
அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குன்னம்பாறையை சேர்ந்த விஜின் என்ற இளைஞர் கடந்த திங்கள்கிழமை பணிமுடிந்து தனது பல்சர் இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பியுள்ளார். அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விஜின், அழகியமண்டபம் அருகே மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் தலைகுப்புற கீழே விழுந்த விஜின், சுமார் 10 அடி தூரத்திற்கு பைக்குடன் சேர்த்து இழுத்துச்செல்லப்பட்டு எதிர் திசையில் வந்துகொண்டிருந்த மற்றொரு வாகனத்தில் மோதி பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் விஜினுக்கு சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி, பார்ப்போரை பதறவைத்துள்ளது.