ரூ.8 இலட்சம் மின் கட்டணத்தால் அதிர்ந்துபோன விவசாயி; அதிகாரிகள் தந்த விளக்கம்.!



Krishnagiri Hosur Farmer EB Bill 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ். இவர் ஒவ்வொரு முறை மின்கணக்கீட்டின் போதும், அரசின் கட்டணப்படி தனக்கு வரும் மின்தொகையை செலுத்தி தவறாது செலுத்தி வந்துள்ளார். 

ரூ.8.75 இலட்சம் மின் கட்டணம்

இதனிடையே, நடப்பு மாதத்திற்கு மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வெங்கடேஷின் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியில், அவருக்கு ரூ.8.75 இலட்சம் மின் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்துளளது.

இதையும் படிங்க: "ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்பதே ஆசை" - 500 க்கு 492 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ரிஷி.! 

அதிகாரிகள் விளக்கம்

இதனால் அதிர்ந்துபோன விவசாயி மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் சென்று புகார் கூறியுள்ளார். தனது மின் கட்டணத்தை மறுஆய்வு செய்து நிர்ணயம் செய்யுமாறும் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து, அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.

அந்த தகவலில், "மின் உபயோக கட்டண கணக்கீட்டின்போது, 05462 என்ற அளவுக்கு பதில் 85490 என்று தவறுதலாக பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இலட்சக்கணக்கில் மின் கட்டணம் வந்துள்ளது. தவறு சரிசெய்யப்பட்டுள்ளதால், பயனாளி முந்தைய கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மதுரை: தொடர் மழையால் உண்டான திடீர் அருவி; ஒத்தக்கடை ஆனைமலையில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்.!