96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நிலத்தகராறு.. கணவனை போட்டு தள்ளிய மனைவி.. அதிர்ச்சி தகவல்..!
தேனி மாவட்டம் போடி பகுதியில் வசித்து வந்தவர்கள் ரமேஷ் - கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரமேஷ் வீட்டின் குளியலறையில் மயங்கி கிடந்ததாக கூறி அவரது மனைவி கிருஷ்ணவேணி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் ரமேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு பரிந்துரை செய்தனர்.
பின்னர் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் ரமேஷ் உடம்பில் ரத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் ரமேஷ் கொலை செய்யப்பட்டு இறந்தது உறுதியானது. இதனையடுத்து ரமேஷின் மனைவி கிருஷ்ணவேணியிடம் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ரமேஷிற்கு சொந்தமான நிலத்தை விற்பது தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு வந்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணவேணி தனக்குத் தெரிந்த நபர்களிடம் நிலத்தை விற்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரமேஷ் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே கிருஷ்ணவேணி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரமேஷின் மனைவி கிருஷ்ணவேணியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.