96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
என்னென்ன பண்றானுங்க பாருங்க.. போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் ஏற்றி விற்பனை.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!
ஈரோடு அருகே வலி நிவாரணி போதை மாத்திரைகளை நீரில் கரைத்து ஊசி மூலம் விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைதொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வீரப்பன் சத்திரம் பகுதியில் போதை ஊசிகள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுகிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை நீரில் கரைத்து ஊசியில் ஏற்றி விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.