53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
#Don't Miss It | UPSC தேர்வு எழுதுபவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!
ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் முதல் நிலை (PRELIMS) தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கு செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று “NAAN MUDHALVAN UPSC PRELIMS SCHOLARSHIP EXAM 2023” எனப்படும் தேர்வை நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கும் 1000 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 7,500 பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்:-
"தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது.
அதில் ஒன்றாக, #நான்_முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை #UPSC தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்!" என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது.
— M.K.Stalin (@mkstalin) August 4, 2023
அதில் ஒன்றாக, #நான்_முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை #UPSC தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள்… https://t.co/bXAL67OFZh