பெற்றெடுத்த தாயே சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடுமை.. 5 பெண்களுடன் 11 பேர் கைது...!!
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி கிராமம், எஸ்.ஆர்.வி நகரில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, குறிப்பிட்ட வகையில் 16 வயது சிறுமி மற்றும் 5 பெண்கள் வீட்டில் இருந்துள்ளனர். 16 வயது சிறுமி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெரும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
சிறுமியை அவரின் தாயே பாலியல் தொழிலில் தள்ளிய நிலையில், வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தாய், 5 பெண்கள், கிருஷ்ணமூர்த்தி (வயது 44), அசோக் ராஜ் (வயது 31) உட்பட 11 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.