53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மிளகாய்பொடித்தூவி கொத்தனாரின் கதையை முடித்த கும்பல்; மதுரையில் கொடூரம்.!
கொத்தனார் ஒருவர் மிளகாய்பொடி தூவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் சதிஷ் (வயது 37). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று, இவர் மேலக்கால் கணவாய் பகுதியில் இருந்தார்.
இதையும் படிங்க: வீட்டில் தனியே இருந்த மூதாட்டி மர்ம கொலை; திருப்பத்தூரில் அதிர்ச்சி.!
அச்சமயம், அங்கு காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று, சதீஷை சுற்றிவளைத்து மிளகாய்பொடித்தூவி வெட்டிக்கொலை செய்தது. இதனால் நிகழ்விடத்திலேயே சதிஷ் துள்ளத்துடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையினர் விசாரணை
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த சோழவந்தான் காவல்துறையினர், சதீஷின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், சதீஷை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கந்து வட்டி தகராறு... கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்.!! காவல்துறை தீவிர விசாரணை.!!