96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தென்னகமே அதிர்ச்சி.. சிறுமி பாலியல் பலாத்காரம், எலிமருந்து கொடுத்து கொலை.. காதலன் குடும்பமே வெறிச்செயல்.!
பிப். 14 ஆம் தேதி காதல் வலையில் விழுந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த நாகூர் அனிபா, சிறுமிக்கு எலிமருந்து கொடுத்து கொடூரமாக துடிதுடிக்க கொலை செய்த பரபரப்பு சம்பவம் மதுரையை அதிரவைத்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், தும்பைப்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த பிப். 14 ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமான நிலையில், சிறுமியின் பெற்றோர் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முதலில் மனு ரசீது மட்டும் காவல் அதிகாரிகள் தரப்பில் கொடுக்கப்பட்ட நிலையில், தொடர் வற்புறுத்தலுக்கு பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமிக்கும் - கிராமத்தில் வசித்து வந்த சுல்தான் என்பவரின் மகன் நாகூர் அனிபாவுக்கும் இடையே காதல் இருந்தது உறுதியானது. இதனால் நாகூர் அனிபா சிறுமியை கடத்தி சென்று இருக்கலாம் என விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், நாகூர் அனிபாவின் தாய் மதினா பேகம், கடந்த 3 ஆம் தேதி சிறுமியை அவரின் வீட்டில் கொண்டு வந்துவிட்டு சென்றுள்ளனர்.
வீட்டிற்கு வந்த சிறுமியோ உடல்நலக்குறைவுடன் காணப்படவே, அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க, அங்கும் உடல்நலம் சரியாகவில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட, சிறுமிக்கு என்ன நடந்தது? என தெரியாததால் உரிய சிகிச்சையும் உடனடியாக அளிக்க இயலவில்லை.
இதனால் நாகூர் அனிபாவிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிடவே, அவர் தலைமறைவாகி இருந்துள்ளார். அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையத்தில் வைத்து அவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் வெளியானது.
விசாரணையில், "கடந்த பிப். 14 ஆம் தேதி சிறுமிக்கு திருமண ஆசைகாண்பித்த நாகூர் அனிபா, மதுரையில் உள்ள நண்பர் பெருமாள் கிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருக்கும் சித்தப்பா இப்ராஹிமின் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சமயத்தில் தான் சிறுமியை அதிகாரிகள் தேடும் விவகாரம் தெரியவந்துள்ளது.
இதனால் பயந்துபோன நாகூர் அனிபா, சிறுமிக்கு எலிமருந்தை வாங்கி கொடுத்து, தானும் சாப்பிட்டு இருக்கிறார். சாப்பிட்ட எலி மருந்து சிறிது நிமிடத்திற்குள்ளாகவே தானாக வெளியேற, சிறுமிக்கு அருகே இருக்கும் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, தாயிடம் தகவலை கூறி வீட்டில் விட்டுவிடச்சொல்லி அனுப்பி வைத்துள்ளான்" என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்ததாக மதுரை திருநகரை சேர்ந்த பிரகாஷ், திருப்பரங்குன்றம் கிருஷ்ணன், ராஜா முகமது, திருப்பூர் சாகுல் அமீது, நாகூர் அனிபாவின் தாய் மதினா பேகம், உறவினர் ரம்ஜான் பேகம், ராஜா முகமது ஆகிய 7 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் தான் சிறுமிக்கு எலிமருந்து கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திருப்பூரில் உண்மையில் சிறுமியை நாகூர் அனிபா மட்டும் பாலியல் பலாத்காரம் செய்தானா? அல்லது வேறு ஏதேனும் துயரம் நடந்ததா? என்பதை விசாரணை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால், சிறுமி இன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழக்கவே, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமியின் மரணத்தில் உள்ள மர்மம் தெரியாமல் போயுள்ள நிலையில், குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.