ஏலசீட்டு நடத்துவதாக 600 பேரிடம் 60 இலட்சம் வசூலித்து தலைமறைவான போலிஸ் தம்பதி.. மதுரையில் அதிர்ச்சி.!



Madurai Police couple Cheating Finance

தீபாவளி சீட்டு பிடிப்பதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த தலைமறைவான காவல்துறை தம்பதியை அதிகாரிகள் தேடி வருகின்றனர். 

மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பேரூராட்சியைச் சார்ந்தவர் மோகன். இவர் மதுரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கஸ்தூரி. 

தம்பதிகள் இருவரும் சேர்ந்து தீபாவளி சீட்டு பிடிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த 600 பெண்களிடம் தலா ரூபாய் 10 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர். தீபாவளி நெருங்கி வருவதால் பணம் போட்டவர்கள் அதனை கேட்க தொடங்கியுள்ளனர்.

madurai

இன்று நாளை என தம்பதி இழுத்தடித்து வந்த நிலையில், திடீரென இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணத்துடன் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் தம்பதியை தேடி வருகின்றனர்.