96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய காவல் அதிகாரி... தனியாக வீடு எடுத்து வசமாக சிக்கிய பரிதாபம்.!
காவல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பெண்ணின் குடும்ப வறுமையை பயன்படுத்தி மூளைச்சலவை செய்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடுமை நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் டி.ஆர்.ஓ காலனி முனியாண்டி கோவில் தெருவில் விபச்சார தொழில் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலை அறிந்ததும் விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா, உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ உட்பட பெண் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்குள்ள சர்ச்சைக்குரிய வீட்டில் அதிரடியாக நடந்த சோதனையில், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சுமதி என்ற பெண்மணியிடம் விசாரணை நடந்தது. அப்போது, அவர் தனது குடும்ப வறுமையால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டது தெரியவந்தது. அவரிடம் ஆசை வார்த்தை கூறிய ஐயர் பங்களாவை சார்ந்த தேவேந்திரன் (வயது 43), செல்லுரை சேர்ந்த காசி (வயது 42) ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து விபச்சாரத்தில் தள்ளியதும் அம்பலமானது.
மேலும், இவர்கள் விபச்சாரத்தை பெருக்குவதற்காக வெளியூரில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருந்ததும் உறுதியானது. இதனைத்தொடர்ந்து, தேவேந்திரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தேவேந்திரனின் மீது வழக்கு பதிவு செய்து காவலர் துறையினர் தேவேந்திரன் மற்றும் காசியை கைது செய்து சிறையில் அடித்தனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல் அதிகாரியே பெண்ணை விபசாரத்தில் தள்ளிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.