மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீராத சர்க்கரை நோயுடன் கால்களில் புண்கள்; மருத்துவமனையிலேயே தூக்கில் தொங்கிய நோயாளி.!
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் செல்வம் (62). இவர் நீண்ட ஆண்டுகளாக சர்க்கரை நோய் காரணமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இவரின் கால்களில் சமீபத்தில் புண்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிக்குச்சென்று படிக்க வற்புறுத்தியதால் துயரம்; தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த 15 வயது சிறுவன்.!
அங்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த செல்வம், தாங்க இயலாத வலியால் அவதிப்பட்டுள்ளார். ஒருகட்டத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை மீதான நம்பிக்கை பறிபோயுள்ளது.
இதனால் மனவிரக்தி அடைந்த செல்வம், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீளா துயரம் ... ஆசையாக வளர்த்த மகள் செய்த துரோகம்.!! தந்தையின் பரிதாப முடிவு.!