பூட்டிய கழிவறையில் இருந்து வெளியே வந்த சத்தம்.. பூட்டை உடைத்து பார்த்ததும் அனைவரும் சிரித்துவிட்டனர்..



Man locked in Public toilet

மாநகராட்சி கழிப்பறைக்குள் வைத்து இளைஞர் ஒருவரை ஊழியர்கள் பூட்டிச்சென்ற சம்பவம் வைரலாகிவருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் உள்ள கொரட்டூர் பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிப்பறை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் இளைஞர் உள்ளே இருப்பதை அறியாமல் கழிவறை ஊழியர்கள் கழிவறையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

இதனை அடுத்து கழிவறை உள்ளே இருந்தபடி ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க என இளைஞர் கதவை தட்டி சத்தம் போட ஆரம்பித்துள்ளார். இதனிடையே பூட்டிய கழிவறையில் இருந்து இளைஞரின் சத்தம் வருவதை கேட்ட அக்கம் பக்கத்தினர் கழிவறை முன் கூட்டமாக கூடிவிட்டனர்.

மேலும் நடந்த சம்பவம் குறித்து உள்ளிருந்தபடியே இளைஞர் எடுத்துக்கூற, அதன்பிறகு கழிவறை பூட்டை உடைத்து இளைஞரை வெளியே மீட்டனர். கழிவறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் சிரித்துக்கொண்டே வெளியேவந்தநிலையில், அதனை பார்த்த அங்கிருந்த மக்களும் சிரித்துவிட்டனர்.