96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பொதுக் கழிப்பிடத்திற்குள் இருந்து கேட்ட இளைஞரின் சத்தம்.. பின்னர் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்.!
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை அடுத்து உள்ள கொரட்டூரில் உள்ள பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடம் ஒன்று உள்ளது. அதில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் செல்போனில் பேசியவாறு உள்ளே சென்றுள்ளார்.
அந்த இளைஞர் உள்ளே இருப்பதை அறியாமல் ஊழியர் ஒருவர் கழிப்பறையை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் இளைஞர் வந்து பார்த்த போது கழிப்பிடமானது பூட்டப்பட்டிருந்தது.
அதனையடுத்து அந்த இளைஞர் யாராவது கதவை திறந்து விடுங்கள் ப்ளீஸ் என்று சத்தம் போட்டுள்ளார். சத்தத்தை கேட்டு அங்கிருந்த மக்கள் பூட்டை உடைத்துள்ளனர். அந்த இளைஞரும் கழிப்பறையிலிருந்து சிரித்து கொண்டே வெளியே வந்துள்ளார். அதனை பார்த்து அங்கு கூடியிருந்த மக்களும் சிரித்துள்ளனர்.