96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மனைவி கர்ப்பம்! திருமண ஆசைகாட்டி, 16 வயது சிறுமியை ஏமாற்றி இளைஞர் செய்த மோசமான காரியம்!
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பூபதி. இவர் காதகோட்டையில் பால்பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். 23 வயது நிறைந்த இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகிய நிலையில் அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
இந்தநிலையில் பூபதிக்கு மூலனூர் அருகே 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பூபதி அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி வந்தநிலையில், இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். மேலும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறி, பூபதியுடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் தனது மகளைக் காணாமல் பதறிப்போன மாணவியின் பெற்றோர்கள் அவரது நண்பர்களின் வீடுகள் என பல இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனால் மகள் கிடைக்காத நிலையில் அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்ட நிலையில், இருவரும் சிக்கினர். அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது திருமண ஆசைகாட்டி பூபதி அந்த பெண்ணை ஏமாற்றி, கடத்திசென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர் மீது போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.