35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
அம்மா கேட்ட கேள்வியால் தூக்கில் தொங்கிய மகள்.. ஆத்திரத்தில் மதியிழந்து, மனமுடைந்து செய்த வேலையால் குடும்பமே கண்ணீர் கதறல்.!
அம்மாவின் தொலைபேசி உரையாடலில் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் சென்னையில் உள்ள குரோம்பேட்டையில் உள்ள தனியார் காலேஜில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது கல்லூரியின் விடுதியில் தங்கி உள்ளார். ஆனால், அவருக்கு அங்கு ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கவில்லை என்பதால், ஸ்ரீமதியின் பெற்றோர் குரோம்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து ஸ்ரீமதியுடன் தங்கி உள்ளனர்.
கடந்த டிசம்பர் 18 அன்று ஶ்ரீமதியின் பெற்றோர்கள் மயிலாடுதுறையில் உள்ள தங்களது சொந்த வீட்டை காலி செய்வதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்பொழுது ஸ்ரீமதியின் அம்மா ஸ்ரீமதியின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் ஸ்ரீமதி போனை எடுக்கவில்லை. தொடர்ந்து நான்கு, ஐந்து முறை போன் செய்தும் ஸ்ரீமதி ஃபோனை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பின்னர் வெகு நேரம் கழித்து ஸ்ரீமதி அம்மாவிற்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது ஸ்ரீமதியின் அம்மா எப்பொழுதும் போன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாய்.. நாங்கள் எத்தனை தடவை உனக்கு போன் செய்வது?. ஏன் போன எடுக்கவில்லை.
பரீட்சை நேரத்தில் படிக்காமல் எப்பொழுதும் ஃபோனையே பார்த்துக் கொண்டிருக்கிறாய், காலேஜுக்கு எதற்கு போன் எடுத்து சென்றாய்? என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு கண்டித்துள்ளனர். சிறிது நாட்களுக்கு முன்பு ஸ்ரீமதியின் காலேஜிலிருந்து ஸ்ரீமதியின் பெற்றோர்களுக்கு போன் செய்து தேர்வு சமயங்களில் உங்கள் பெண் போன் எடுத்து வந்து காலேஜில் உபயோகப்படுத்துகிறார் என்று கூறி கண்டிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரம் மற்றும் சம்பவத்தன்று போனை எடுக்காதது என ஸ்ரீமதி அம்மா கடுமையாக போனில் திட்டி உள்ளார். இதனால் ஒருகட்டத்தில் ஸ்ரீமதி பேசிக்கொண்டு இருக்கும்போதே போனை துண்டித்து இருக்கிறார். மீண்டும் அவர்கள் ஸ்ரீமதிக்கு போன் செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீமதி போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஸ்ரீமதியின் பெற்றோர், பக்கத்து வீட்டிற்கு போன் செய்து ஸ்ரீமதியை சென்று பார்க்கும் படி கூறியுள்ளனர். பக்கத்து வீட்டினர் சென்று பார்க்கும் போது ஸ்ரீமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் ஸ்ரீமதியின் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
அதன் பின் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஸ்ரீமதியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.