ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா..!! 



mens festival for rain

மேலூர் என்னும் கிராமத்தில் மழைகாக வேண்டி கொண்டு ஆண்கள் மட்டுமே நடத்த கூடிய திருவிழா ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. மேலூர் அருகே புலிப்பட்டி என்னும் கிராமம் இருக்கிறது அங்கு ஐந்து கோயில் சுவாமிகளில் ஒன்றான பொன்னு முனியாண்டி என்னும் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மழைகாக வேண்டி கொண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வருகிறார்கள். 

இதனை தொடர்ந்து, நேற்றும் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தேறி உள்ளது. இதில் பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக நேர்த்தி கடனுக்காக சுற்றி விடப்பட்ட 21 ஆடுகள் மற்றும் நூற்றுக்கும் மேலான சேவல்கள் பலியிடப்பட்டது. பின் அதன் இறைச்சிகள் சமைக்கப்பட்டு, பரிமாறப்பட்டது.

இந்த நிகழ்வு நள்ளிரவு சுமார் 12 மணியளவில் நடைபெற்றது. இந்த உணவு மேலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வந்த சுமார் 2000 பேருக்கு மேல் பறிமாறப்பட்டது. இதில் அனைத்து மதம், சாதியை சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர். இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பொன்னு முனியாண்டி சுவாமி கோயில் வையன்குப்பான் நான்கு கரை அம்பலகாரர்கள் செய்து வைத்தனர்.