நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்.. சாமர்த்தியமாக யோசித்தும் பறிபோன உயிர்.. கோர விபத்து.!
சிறிய ரக விமானம் நடுவானில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அதனை சாலையில் தரையிறக்க முயற்சித்தபோது, விமானம் சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மெக்சிகோ நாட்டில் உள்ள குரோரா மாகாணம், கடற்கரை நகரம் அகாபுல்கோவில் இருந்து, இரட்டை எஞ்சினுடைய சிறிய விமானம் விமானி உட்பட 4 பேருடன் பயணம் செய்தது. இந்த விபத்தில் 9 பேர் பயணம் செய்யலாம் என்ற நிலையில், நேற்று 4 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.
இந்நிலையில், விமானம் தனது இலக்கில் இருந்து 10 கி.மீ தொலைவில் பயணம் செய்கையில், திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் டெமிஸுக்கோ நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டின் மீது விழுந்துள்ளது. விமானியின் சாமர்த்திய நடவடிக்கையால், அது தலைகீழாக விழுந்து நொறுங்காமல் தப்பித்தது.
ஆனால், சூப்பர் மார்கெட்டுக்குள் மோதி ஏற்பட்ட விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டபோது, விமானத்தில் 3 பேர் உயிரிழந்தது அம்பலமானது. ஒருவர் மட்டும் படுகாயத்துடன் உயிர்பிழைத்தார்.
மேலும், சூப்பர் மார்கெட்டுக்குள் பொருட்கள் வாங்கிக்கொண்டு இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.