அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!



Mi ister sengottaiyan about school admission

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழகத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்பை தவிர மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெறவில்லை.

பொதுவாக அனைத்து வருடமும் புதிய கல்வி ஆண்டானது ஜூன் மாதத்தில் துவங்கும். இதற்கான மாணவர்கள் சேர்க்கை இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடும்.

Tn schools

ஆனால் கொரோனாவின் காரணமாக எந்த பள்ளிகளும் திறக்கப்படாததால் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. மேலும் குழந்தைகளை எப்போது பள்ளியில் சேர்ப்பது என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று பேட்டியளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்றும் தனியாா் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.