அமைச்சரிடம் ஆசிவாங்கி, அன்போடு செலவுக்கு காசு வாங்கிய தொண்டர்கள் - கலாய்க்கும் நெட்டிசன்கள்.!



Minister Anbil Mahesh Paid Amount to Supporters

தன்னைக்கான வந்த தொண்டர்களுக்கு அமைச்சர் செலவுக்கு தன்னால் இயன்ற பணத்தை கொடுத்த நிலையில், அந்த வீடியோ நெட்டிசன்கள் கையில் சிக்கி கலாய்க்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போது, திடீரென வழியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

இந்த நிலையில், அமைச்சர் சிலருக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில், அமைச்சரை அன்போடு பார்க்க வந்த சிலர், அவரை பார்த்து காலில் விழுந்து ஆசிவாங்கிவிட்டு எதோ பேசுகிறார். அமைச்சரும் பதிலுக்கு நகைப்புடன் பேசி, தனது பர்சில் வைத்திருந்த பணத்தை எடுத்து அவரிடம் கொடுக்கிறார். பணத்தை பெற்ற தொண்டரும் மகிழ்ச்சியுடன் செல்கிறார். 

அருகில் மற்றொரு தொண்டர் இருக்க, அவரிடமும் நலம் விசாரித்தவாறு அமைச்சர் பணத்தை கொடுக்கிறார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. மேலும், இந்த விடியோவை பலரும் கலாய்த்து பேசி வருகின்றனர். இதன் உண்மை நிலவரம் தெரியாமல் பலரும் கலாய்த்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும், தன்னைக்கான வரும் தொண்டர்களில் ஒருசிலர் ஆர்வ மிகுதியில் சாப்பிடாமல் கூட வந்திருப்பார்கள். அவர்களுக்கு சாப்பிட பணம் கொடுத்திருக்கலாமே, ஏன் இவ்வாறு அவதூறு செய்கிறீர்கள் எனவும் பதில் கண்டனங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு உறவினர் வீட்டிற்கு செல்கிறோம் என்றால், அவர்கள் தங்களால் இயன்ற ரூ.100, ரூ.200 பணத்தை செலவுக்கு கொடுப்பார்கள். நாமும் அவர்களிடமும் கொடுத்து வந்திருப்போம். அதனைப்போல தான் இதுவும். இதில் கலாய்க்க என்ன உள்ளது? என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.