3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை இடுப்பில் தூக்கிச் சென்ற மீனவர்.!
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் மீன் பிடித்துறைமுகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு பகுதிக்கு ஆய்வுக்கு சென்றார்.
அங்குள்ள உப்பங்கழி ஏரியில், மண் அரிப்பு ஏற்படுவது தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, 7பேர் பயணிக்கக்கூடிய படகில் அமைச்சருடன் 30க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக கூறப்படுகிறது. இதனால் படகு ஒரு புறமாக சாய்ந்து படகிலிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
இதையடுத்து, அமைச்சர் பயணித்த படகில் இருந்த சிலரை வேறொரு படகில் ஏற்றினர். இதனையடுத்து முகத்துவாரம் பகுதியில் ஆய்வை முடித்துக்கொண்டு வந்த அமைச்சரை , மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கிச் சென்று கரை சேர்த்துள்ளார்.