பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
அதிக தொகை செலவு செய்ய முடியாது; பாலம் அடித்து செல்லப்பட்ட விவகாரம்.!அமைச்சர் விளக்கம்.!!
4 மடங்கு அதிக செலவாகும் விசயத்திற்கு தமிழக பொருளாதாரம் இடம் அளிக்காது என அமைச்சர் ஏ.வ வேலு பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு, அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் ஆற்றுப்பாலம், ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த பாலம் திறக்கப்பட்டு 3 மாதங்கள் மக்களின் பயன்பாட்டிலும் இருந்து வந்தது. இதனிடையே, சாத்தனூர் அணையில் இருந்து கனமழை வெள்ளம் காரணமாக தென்பெண்ணையாற்றில் உபரி நீர் 2.63 இலட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால், புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஆற்று நீரில் தரைமட்டமானது. இந்த விஷயம் பெரும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
சந்தேகம் வேண்டாம்
இதனிடையே, தண்டராம்பட்டு ஆற்றுப்பாலம் தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அளித்துள்ள பேட்டியில், "உறுதித்தன்மையை பொறுத்தவரையில் சந்தேகம் வேண்டாம். ஆற்றில் அமைக்கப்படும் பாலத்திற்கும், மேல்மட்ட சாலைக்கும் வித்தியாசம் உள்ளது. மேல்மட்ட பாலம் கார் உட்பட கனகர வாகனங்களின் இயக்கத்தை கணக்கிட்டு வடிவமைக்கப்படும்.
இதையும் படிங்க: "அம்மாவ தப்பா பேசுவியா நீ..' 75 வயது முதியவர் கொடூர கொலை.!! பரபரப்பு பின்னணி.!!
நீர்வளத்துறை அறிக்கை பெயரில் கட்டப்பட்டது
ஆற்றில் அமைக்கப்படும் பாலத்தைப் பொறுத்தவரையில், ஒரு மணிநேரத்திற்கு செல்லும் கன அடி நீரின் அளவை பொறுத்து கட்டப்படும். இந்த தரவுகள் நீர்மேலாண்மைத்துறை சார்பில் வழங்கப்படும். அவர்கள் வழங்கும் தரவுகளை வைத்து பாலம் கட்டப்படும். அவர்கள் ஒவ்வொரு ஆண்டிலும் சென்ற நீரின் அளவை கொடுப்பார்கள்.
2 இலட்சம் கன அடி நீருக்கு கணக்கிட்டால் கூடுதல் செலவு
52 ஆயிரம் கன அடி நீரை கணக்கிட்டு பாலம் கட்டி வைத்திருக்கிறோம் என்றால், திடீரென 2 இலட்சம் கன அடி நீர் சென்றால் பாலம் கட்டாயம் அடித்து செல்லப்படும். சேதம் உண்டாகும். 2 இலட்சம் கன அடி நீரை கணக்கிட்டு நாம் பாலம் கட்டினால், அதற்கு 4 மடங்கு கூடுதல் செலவும். 50 ஆண்டுக்கு ஒருமுறை இவ்வாறு நடக்கலாம்.
உறுதித்தன்மையில் சந்தேகம் வேண்டாம்
அதனை எதிர்பார்த்து அதிக தொகை செலவு செய்ய முடியாது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்காது. அதனால் பாலம் அடித்துக்கொண்டு போனால் தரம் இல்லை என பொருள்படாது. இதுபோன்ற சீற்றங்களில் நடப்பது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா, உலகளவிலும் நடக்கிறது. உறுதித்தன்மை மீது சந்தேகம் வேண்டாம்" என பேசினார்.
இதையும் படிங்க: "ஒருத்தன் போதாதா உனக்கு.." கள்ள காதலை கண்டித்த மாமியார்.!! தூக்கில் தொங்க விட்ட மருமகள்.!!