குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கருங்காலி மாலை கொடுத்த கே.என் நேரு: உடல்நலம்பெற வேண்டி தானே அணிவிப்பு.. தொண்டர்கள் மகிழ்ச்சி.!
சென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், அமைச்சர் கே.என் நேரு, அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு வெள்ளியினால் செய்யப்பட்ட கருங்காலி மாலை அணிவித்தார்.
திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கு அடிக்கடி உடல்நிலை குன்றும் காரணத்தால், தான் கருங்காலி மாலை அணிவிப்பதாக அமைச்சர் கே.என் நேரு தனது பாணியில் பதிலளித்து மாலையை அணிவித்தார்.
கருங்காலி மாலை கண்திருஷ்டி, செய்வினை, ஏவல்கள் விலகி செல்வம் பெறுக ஆன்மீக ரீதியான அனுபவம் பெற்ற பலரும் அணியும் மாலை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் கருங்காலி மாலை மற்றும் அதுசார்ந்த விவாதங்கள் நெட்டிசன்களால் அதிகளவு கலாய்க்கப்பட்டும் வந்தது. இந்நிலையில், அமைச்சருக்கு மற்றொரு அமைச்சர் உடல்நலம் சரியாக கருங்காலி மாலை கொடுத்துள்ளார்.