அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; சேறு வீசிய குடும்பத்தை தேடித்தேடி ரவுண்டு கட்டி கைது செய்த காவல்துறை.!



Minister Ponmudi Mud Throw Case Cops Arrested Some Accuses 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக கடுமையான வெள்ள சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளம் வடிந்த பின்னர் படிப்படியாக மீட்புப் பணிகள் படிப்படியாக நடைபெற்றது. மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டன. அரசின் சார்பில் நிதியுதவியும் ரேஷன் அட்டைக்கும் வழங்கப்ட்டது.

சேறு வீச்சு சம்பவம்

பெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் பொன்முடியின் மீது சேறு வீசப்பட்ட நிகழ்வு அடைந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வலதுசாரி அமைப்பு கட்சியைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. காவல்துறையினர் நடவடிக்கை என்பது எடுக்கப்படாமல் இருந்தது.

இதையும் படிங்க: #JustIN: அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜர்; காரணம் என்ன?

இந்நிலையில், பெஞ்சல் புயலின் தாக்கத்தால் வெள்ளத்தில் சிக்கி, உணவுகேட்டு போராடி, அமைச்சரின் மீது சேற்றை வீசிய நபர்கள் பொங்கலை முன்னிட்டு நேற்று கைது செய்யப்பட்டதாக சில காணொளிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

அந்த காணொளியில், நாங்க எந்த தப்புமே செய்யல சார். எங்கள விட்டுடுங்க என்ற கதறியும் அவர்களை போலீசார் ரவுண்டு கட்டி குண்டுகட்டாக தூக்கி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: #JustIN: அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜர்; காரணம் என்ன?