96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
புத்தாண்டு நாளில் கோவிலுக்கு சென்று வழிபட தடை? - அமைச்சர் அறிவிப்பு.!
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல தடைகள் விதிக்கப்பட்டாலும், கோவிலுக்கு செல்ல தடைகள் கிடையாது என அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவில் நிலங்களை கண்டறிவது தொடர்பாக வட்டாட்சியருடன் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில், 36 வட்டாட்சியர்களுடன் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் பெண்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழகத்தில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், கோவில்களுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடைகள் ஏதும் கிடையாது. தமிழக அரசு வழங்கியுள்ள கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மக்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.