ஜூன் மாத இறுதிக்கு பிறகு கால அட்டவணை.. 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுவது உறுதி என அமைச்சர் ட்வீட்!



minister sengottaiyan says 10 th exams will be conducted

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுவது உறுதி என்றும் ஜூன் மாத இறுதிக்கு பிறகு கால அட்டவணை அறிவிக்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால் உலக இயந்திரமே இயங்காமல் தடைபட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி தேர்வுகள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை மேற்படிப்புகளை தேர்வுசெய்வதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தான் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஊரடங்கிற்கு பிறகு நிச்சயம் நடத்தப்படும் என ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

10th Exam

இந்நிலையில் சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதிக்குள் நடத்தப்படும் என்று மத்திய் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகளும் நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.