96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எதன் அடிப்படையில் வெளியிடப்படும்.? அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளி கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டன. இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவில்லை. மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில் 10- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையிலே வெளியிடப்படும், கிரேடு முறை கிடையாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கிரேடு முறையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வழங்கப்படலாம் என்று வெளியான செய்திகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.