5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? அமைச்சர் அதிரடி!



minister sengottayan talk about public exam

நடப்பாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவிலிருந்து அரசு பின் வாங்காது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முறையால், உளவியல் ரீதியான பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை.

public exam

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், மாணவர்களின் திறனை மேம்படுத்தவே இந்த பொதுத்தேர்வு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் செயல்படுத்தினால் மட்டுமே அதுகுறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கும் என்பதால் இந்த ஆண்டு நிச்சயம் பொது தேர்வு நடைபெறும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், அனைத்து  அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.