96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய செய்தி.! அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட தகவல்.!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடுமுழுவதும் பள்ளிகள் மூடப்பட்டது. கொரோனாவால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த அக்டோபர் மாதம் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டது. ஆனால், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவும் கைவிடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில், ஆன்லைன் வகுப்புகள் மூலம் குறைந்த அளவிலேயே பாடம் நடத்தப்படுவதால் 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. மீதமுள்ள 60% பாடப்பகுதிகளில் இருந்தே பொதுத்தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்றும் இந்த முறையும் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.