3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
தமிழக மீனவர்களின் நலனுக்காக உறுதியளித்த பாஜக தலைவர் எல்.முருகன்.! உடனே போன் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் மத்திய இணையமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக -அதிமுக கூட்டணியில் இணைந்து தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதில், 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழக பாஜக தலைவரான எல்.முருகனுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று அமைச்சராக பதவியேற்ற நிலையில் இன்று மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை இணையமைச்சராக அவர் பொறுபேற்றுள்ளார்.
இணையமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன், தமிழக மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படும் என உறுதியளித்துள்ளார். மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.