கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
#Breaking: மக்களவை தேர்தலில் இருந்து ம.நீ.ம விலகல்; திமுக+ கூட்டணிக்கு தார்மீக ஆதரவு.. அதிகாரபூர்வ அறிவிப்பு.!
2024 மக்களவை பொதுத்தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, தமிழ்நாட்டில் பிரதான கட்சியாக திமுக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஏற்கனவே திமுக கூட்டணியில் கடந்த 2 சட்டப்பேரவை, பாராளுமன்ற தேர்தலை கொண்ட அதே கட்சிகள் 2024 மக்களை தேர்தலிலும் இணைந்து போட்டியிடுகின்றன.
திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இறுதிவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி, 2024 பொதுத்தேர்தலில் தனது தார்மீக ஆதரவை திமுக தலைமையிலான கூட்டணிக்கு வழங்குகிறது. மாநிலங்களவையில் ஒரு சீட்டு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக சார்பில் வழங்கப்படும். மக்கலவைக்கான நேரடி தேர்தலில் ம.நீ.ம போட்டியிடவில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.